fbpx
Homeபிற செய்திகள்விரைவான புயல் நிவாரணப் பணி: தமிழக அரசுக்கு ஐஜேக பாராட்டு

விரைவான புயல் நிவாரணப் பணி: தமிழக அரசுக்கு ஐஜேக பாராட்டு

தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளியில் ஐஜேக மாநில தலைவர் ரவிபச்சமுத்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த சில நாட்களுக்கு முன் வந்த மாண்டஸ் புயல் பாதிப்பில், தமிழக அரசின் செயல்பாடு சிறப்பாக இருந்தது. புயல் காரணமாக கீழே விழுந்த மரங்களை உடனடியாக அகற்றினார்கள்.

சென்னையில் கன மழை

சென்னையில் கன மழையின் போது கடந்த காலங்களை போல் தண்ணீர் தேங்காமல், நடவடிக்கை எடுத்துள்ளார்கள். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழையின் போதும், மாண்டஸ் புயலின் போதும், தண்ணீர் தேங்கிய பகுதிகளில், உடனடியாக தண்ணீரை மின் மோட்டர் வைத்து அகற்றி துரித நடவ டிக்கை எடுத்தார்கள்.

வருகின்ற நாடளுமன்ற தேர்தலில், ஒரு சில பகுதிகளில் முக்கிய பிரச்சினைகளை முன் வைத்து பிரச்சாரம் செய்யவுள்ளோம். தற்போது கட்சியை வளர்க்கும் பணியில் ஐஜேக ஈடுபட்டு வருகிறது.

நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை தற்போது சொல்வதிற்கில்லை/ அரசு மக்களுக்கு தேவையான நல்ல கல்வி, வேலை வாய்ப்பு, மருத்துவத்தை கொடுக்க வேண்டும். இவ்வாறு ரவி பச்சமுத்து தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img