fbpx
Homeபிற செய்திகள்வளர்ச்சி திட்டப்பணிகள் - உயர்மட்ட குழுக் கூட்டம்

வளர்ச்சி திட்டப்பணிகள் – உயர்மட்ட குழுக் கூட்டம்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள்; தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்களுடனான மாவட்ட உயர்மட்ட குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடை பெற்றது.

இக்கூட்டத்தில், ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, ஊரகவளர்ச்சி மற் றும் ஊராட்சித்துறை, மருத்துவம் மற்றும் மக் கள் நல்வாழ்வுத்துறை, வனத்துறை, நகராட்சி நிர் வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தமிழ்நாடு மின்சாரவாரியம், பள்ளிக்க ல்வித்துறை, காவல்துறை, கூட்டுறவுத்துறை, பொதுப் பணித்துறை, வேளாண்மை – உழவர் நலத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மாசுகட்டுப் பாட்டுவாரியம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், கால்நடை பராமரிப் புத்துறை மற்றும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக துறைவாரியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில், பேரூராட்சிகள் துறையின் சார்பில் நிலு வையில் உள்ளபணிகள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் புதிய துணை சுகாதார நிலையங் கள் அமைத்தல், தோட்டக்கலை மற்றும் மலைப்ப யிர்கள் துறையின் சார் பில் தாளவாடியில் மூலிகை பண்ணை அமைத்தல், தொழிலாளர் நலத்துறையின் சார்பில் பதிவு பெற்றகட்டுமானத் தொழிலாளர்களுக்கான வீட்டுவசதித்திட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான தமிழ்நாடு அரசின்; உரிமைகள் வழங்குதல், அரசு அங்கன்வாடி கட்டிடங்களில் கழிப்பிட வசதி அமைத்துத்தருதல், ஈரோடு விற்பனைக்குழு சார்பில் பர்கூர் துணை ஒழுங்குழுறை விற்பனைக் கூடம் அமைக்கப்பட்டுள்ள இடத்திற்கு அணுகுசாலை அமைத்தல், நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் நான்கு வழிசாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளின் நிலை குறித்து தொடர்புடையதுறை அலுவலர்களுடன் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், ஈரோடு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து பணிகளையும்; விரைவில் முடித்திடுமாறு தொடர்புடைய அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மரு. மணீஷ் , மாநகராட்சி ஆணையாளர் வ.சிவ கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் சு.சாந்தகுமார் உட்பட அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img