தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், ஏலகிரி ஊராட்சியில் மாநில நிதிக்குழு மான்யம் மற்றும் ஒன்றிய பொது நிதியில் கடுதுகாரம்பட்டி கிராமத்தில் ரூ.9 இலட்சம் மதிப்பீட்டில் தனிநபர் குடிநீர் இணைப்பு, சென்றாயன்கொட்டாய் கிராமத்தில் 33 தனி நபர்களுக்கு ரூ.4 இலட்சம் மதிப்பீட்டில் குடிநீர் இணைப்பு, கொட்டாவூர் கிராமத்தில் ரூ.1 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் தளம், கொட்டாவூர் பச்சியப்பன் கொட்டாய் கிராமத்தில் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் மினி டேங்க் அமைத்தல் ஆகிய பணிகளை தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் அடிக்கல்நாட்டி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், நல்லம்பள்ளி ஒன்றிய குழு தலைவர் மகேஷ்வரிபெரியசாமி, ஒன்றிய கவுன்சிலர் த.காமராஜ், பாமக மாநில அமைப்பு செயலாளர் ப.சண்முகம், ஊராட்சி மன்ற தலைவர் பழனிஅறிவு, பசுமைத் தாயக மாவட்ட துணை செயலாளர் தமிழரசன், ஊராட்சி வார்டு உறுப்பினர் முனுசாமி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊர்பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.