fbpx
Homeபிற செய்திகள்அண்ணாமலை பல்கலை. மைதானத்தில் 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி

அண்ணாமலை பல்கலை. மைதானத்தில் 100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி

சிதம்பரம் அண்ணாமலைப் நகரில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பொதுமக்கள் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பேசினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.எம். கதிரேசன், பதிவாளர்(பொறுப்பு) சிங்காரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக சிதம்பரம் சப்- கலெக்டர் ராஷ்மிராணி வரவேற்றார். நிகழ்ச்சிகள் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் ஏப்ரல் 19-ந்தேதி அனைவரும் வாக்களிப்பது நிச்சயம் என்ற வடிவில் அணிவகுத்து நின்றனர்.

முன்னதாக 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது தொடர்ந்து விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை கலெக்டர் அருண் தம்புராஜ் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். பின்னர் 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் கைடுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் சப்-கலெக்டர் நேர்முக உதவியாளர் புகழேந்தி, தாசில்தார் ஹேமா ஆனந்தி, அண்ணாமலை நகர் பேரூராட்சி செயல் அலுவலர் கோ.பாலமுருகன், துணைவேந்தர் நேர்முக செயலாளர் பாக்யராஜ், பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி ரத்தின சம்பத் உள்பட பல்கலைக்கழக புலமுதல்வர்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img