fbpx
Homeபிற செய்திகள்கோவையில் இளம் தொழில் முனைவோர் மையம் சார்பில் ‘யெஸ்கான் 2024’ மாநாடு

கோவையில் இளம் தொழில் முனைவோர் மையம் சார்பில் ‘யெஸ்கான் 2024’ மாநாடு

கோவையில் இளம் தொழில் முனைவோர் மையம் சார்பில் ‘யெஸ்கான் 2024’ மாநாடு கடந்த 5, 6ம் தேதிகளில் நடைபெற்றது. இது, கடந்த 2012ம் ஆண்டு முதல், தொழில் முனைவோரின் அனுபவங் களை பகிர்ந்துகொள்ளும் வகையில் ஒழுங் கமைக்கப்பட்ட ‘யெஸ்’ -ன் வருடாந்திர மாநாடு ஆகும்.

கோவை கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு கொடிசியா தலைவர் வி.திருஞானம் தொடங்கி வைத் தார். ‘யெஸ்’ தலைவர் நீதிமோகன், ஒருங் கிணைப்பாளர் முத்துக்குமார், இணை கன்வீனர் தீபக் ராஜ்குமார், ‘யெஸ்’ அலுவலகப் பணியாளர்கள் பங்கேற்றனர்.

‘யெஸ்’ கடந்த 2004ம் ஆண்டு தமிழ்நாடு தொழில் வர்த்தக சபையால் நிறுவப்பட்டது. இது தொழில்முனைவோர் தொடர்பான சவால்கள், இடர்பாடுகளை வெற்றிகரமாக வழிநடத்த இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது.

இந்த ஆண்டு, கோவையில் ‘மிகுதியாய் உணர் – மிகுதியை உணருங்கள்’ என்ற தலைப்பில் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் உள்ள 2500க்கும் மேற்பட்ட ‘யெஸ்’ உறுப்பினர்கள் இதில் பங்கேற்றனர்.

இந்த மாநாடு நிகழ்வின் ஒரு பகுதியாக ‘யெஸ் மார்ட்’ வர்த்தக கண்காட்சி நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்பட்டன.

படிக்க வேண்டும்

spot_img