fbpx
Homeபிற செய்திகள்பெண்களுக்கு ஆரோக்கியத்தை வலியுறுத்தும் வகையில் ஜெம் அறக்கட்டளை சார்பில் இரவு நேர மாரத்தான் போட்டி

பெண்களுக்கு ஆரோக்கியத்தை வலியுறுத்தும் வகையில் ஜெம் அறக்கட்டளை சார்பில் இரவு நேர மாரத்தான் போட்டி

ஜெம் அறக்கட்டளை சார்பில் பெண்களின் ஆரோக்கியத்தை மையமாகக் கொண்டு, பெண்களுக்கு வயிற்று பகுதி, கர்ப்பப்பை புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற் படுத்துவதற்காக இரவு நேர மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது.

இரண்டாம் ஆண்டாக இப்போட்டி வரும் பிப்ரவரி 17ம் தேதி நடைபெறுகிறது. ஜெம் அறக்கட்டளை, கோவை மாநகர காவல் துறை, தமிழ்நாடு அத்லட்டிக் அசோசியேஷன் ஆகியவை இணைந்து கோவை வ.உ.சி. மைதானத்தில் இப்போட்டியை நடத்த உள்ளன.

இந்நிலையில் கோவை ஜெம் மருத்துவமனை அரங்கில் இப்போட்டிக்கான டி-ஷர்ட் வெளியிடும் நிகழ்வு நடைபெற்றது. கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு போட்டிக்கான டி-ஷர்ட்டை வெளியிட்டார்.

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “பெண்கள் வீட்டில் உள்ளவர்களை பார்த்து கொள்வதுபோல் அவர்களை பார்த்துக் கொள்வதில்லை. இந்த சூழலில் நோய்தடுப்புக்காக உடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியம்.

இதுபோன்ற போட்டிகள் பெண்களின் ஆரோக்கியத்தையும், மன நிம்மதியை அளிக்கும்“ என்றார். போட்டி நடைபெறும் நாளன்று பெண்களுக்கான சத்தான உணவு காட்சி, யோகா பயிற்சிகள், கலை நிகழ்ச்சிகள் ஆகிய வை நடத்த திட்ட மிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பங்கேற்க விருப்பமுள்ள பெண்கள் www.coimbatore womensmarathon.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

டி-ஷர்ட் வெளியிடும் நிகழ்வில், ஜெம் மருத்துவமனை தலைவர் டாக்டர். பழனிவேல், டாக்டர். பிரவீன் ராஜ், தலைமை செயல் அதிகாரி பிரபா பிரவீன்ராஜ், இணை நிர்வாக இயக்குநர், ஜெம் அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img