கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனை மாவட்ட ஆட் சியர் கிராந்திகுமார் பாடி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் வெளியிட்டார்.
இறுதி வாக்காளர் பட்டியலின்படி கோவை மாவட்டத்தில் 15 லட்சத்து 9 ஆயிரத்து 906 ஆண்களும், 15 லட்சத்து 71 ஆயிரத்து 93 பெண்களும் மூன்றாம் பாலினத்தவர் 595 பேர் என மொத்தம் 30 லட்சத்து 81 ஆயிரத்து 596 வாக்காளர்கள் கோவையை சேர்ந்த 10 சட்டமன்ற தொகுதிகளில் உள்ளனர்.
இதில் அதிகபட்சமாக கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியில் 4,62,612 வாக்காளர்களும் குறைந்தபட்சமாக வால்பாறை தொகுதியில் 1,96,503 வாக்காளர்களும் உள்ளனர்.
இதர தொகுதிகளான மேட்டுப்பாளையத்தில் 302426 வாக்காளர்கள், சூலூரில் 321803 வாக்காளர்கள், கோவை வடக்கில் 335072 வாக்காளர்கள், தொண்டாமுத்தூரில் 332085 வாக்காளர்கள், கோவை தெற்கில் 243220 வாக்காளர்கள், சிங்காநல்லூரில் 327491 வாக்காளர்கள், கிணத்துக்கடவில் 335436 வாக்காளர்கள், பொள்ளாச்சியில் 224946 வாக்காளர்கள் உள்ளனர்.