பெரியநாயக்கன்பாளையத்தில் செயல்பட்டு வரும் யுனைடெட் தொழில்நுட்பக் கல்லூரியில் 9வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. முனைவர். ஜே.மோகனசுந்தரி (கேஜே ஷார்ப் ட்ரெண்டிஸ் – ஷார்ப் எலக்ட்ரோட்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் நிர்வாக இயக்குனர்) பட்டமளிப்பு விழாவில் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.
அவர் பேசியதாவது: பட்டதாரிகள் ஒரு நல்ல தொழிலைப் பெற வேண்டுமானால், தங்கள் படிப்பின் அடிப்படைகளில் தங்களை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்கள் தங்கள் துறையில் உள்ள உள்ளடக்கத்தை ஒருங்கிணைக்க வேண்டும் மற்றும் அவர்களின் வாழ்க்கையில் வெற்றிபெற நடத்தை மற்றும் பண்புகளைக் கொண்டிருக்க வேண்டும்.
நமக்கு பொறுப்பு என்பது முக்கியமானது, எல்லா சக்தியும் உங்களிடம் உள்ளது. நீங்கள் எதையும், எல்லாவற்றையும் செய்ய முடியும், கடினமான நேரங்களில் உண்மையான மனிதர்களை அடையாளம் காணலாம் .
வாழ்க்கை ரோஜாக்களின் படுக்கை அல்ல, வருகின்ற சவால்களை எதிர்நோக்க கூடிய சக்திகளை பெற வேண்டும். சவாலுக்கு மேலே உயர செயல்பட வேண்டும் எதிர்வினையாற்ற வேண்டாம். மாணவர்களின் கனவுகளை நனவாக்க ஊக்குவித்து அவர்களுக்கு பட்டப்படிப்பு சான்றிதழ்களை வழங்கினார்.
இதில் 100 மாணவர்களுக்கு மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங் கப்பட்டது. நிகழ்ச்சியில் எஸ்.சண்முகம், நிறுவனர் மற்றும் தலைவர், யுனைடெட் கல்வி நிறுவனங்கள், முனைவர். சிஏ.எம். கைலாஷ் குமார், நிர்வாக அறங்காவலர், யுனைடெட் கல்வி நிறுவனங்கள், வி.அருண்கார்த்திகேயன், செயலாளர், யுனைடெட் கல்வி நிறுவனங்கள், மைதிலி சண்முகம், இணைத் தலைவர், யுனைடெட் கல்வி நிறுவனங்கள், பேராசிரியர், முனைவர் . ஆர். ராதாகிருஷ்ணன், முதல்வர், யுனைடெட் தொழில் நுட்பக் கல்லூரி மற்றும் யுனைடெட் தொழில்நுட்பக் கல்லூரியின் அனைத்துத் துறைத் தலைவர்கள் கலந்து கொண்டனர்.