கோவையில் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு செயல்வீரர்கள் கூட்டம் பொன்விழா நகர் மஸ்ஜிதுல் அக்ரம் பள்ளிவாசல் அரங்கில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு கோவை தவ்ஹித் பேரவை ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஏ.எம்.நௌஃபல் தலைமை தாங்கினார். குழு உறுப்பினர் எஸ்.எஸ்.ஏ.இப் ராஹிம் வரவேற்று பேசினார்.
விழாவில் தேசிய தவ்ஹீத் கூட்டமைப்பு மாநில பொதுச்செயலாளர் ஏ.எஸ்.அலாவுதீன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினர். அவர் பேசும்போது, “வரும் ஜனவரி 8 -ந்தேதி திருச்சியில் மாமனிதர் நபிகள் நாயகம் மாநாடு நடைபெறுகிறது.
அதை சிறப்பாக நடத்துவது குறித்து இந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அதன்படி நாட்டில் அமைதியையும் மத சகிப்பு தன்மையையும் மேலோங்க செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் நபிகள் நாயகம் சிறப்பு மநாடு நடத்தப்படுகிறது.
இதற்கான பணிகளை மேற்கொள்ள கோவையில் 23 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் நடைபெற உள்ள மாநாட்டில் கோவையில் இருந்து குறைந்தது 5 ஆயிரம் பேராவது கலந்த கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் பேச்சாளர்கள் பக்கீர் முகமது, நவாஸ், கே.எம்.எஸ்.சித்திக், அமானுல்லா, ஜலால், அபு ஆகியோர் உள்பட பலர் கலந்துகொண்டனர் முடிவில் ஆசாத்நகர் ஜமாத்துத் தவ்ஹீத் மின்ஹாஜ் நன்றி கூறினார்.