கோவையில் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் டாக்டர் பி வி செந்தில் பேட்டி
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில துணை தலைவர் டாக்டர் பி.வி.செந்தில் நேற்று கோவை வந்தார். அப்போது அவர் பிரஸ் கிளப்பில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் தில்லு முல்லு நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நேர்மையாக தேர்தல் நடைபெற்றால் இந்தியா கூட்டணி 300 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்.
பாரதிய ஜனதா கட்சி நூற்றுக்கும் குறைவான இடங்களையே பெறும். பாரதிய ஜனதா கட்சி கச்சத்தீவு பிரச்சனையை கையில் எடுத்து மக்கள் பிரச்சனையை திசை திருப்ப முயற்சிக்கிறார்கள்.
இந்திய ஜனநாயகத்தை காக்க மக்கள் இந்தியா கூட்டணிக்கு வாக்களித்து பெருவாரியான வெற்றியை பெற்றுத்தர வேண்டும். மேற்கண்டவாறு அவர் கூறினார்.
அப்போது காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பச்சமுத்து உடன் இருந்தார்.