fbpx
Homeபிற செய்திகள்கோவையில் மாநில அளவிலான கராத்தே, சிலம்பம், யோகா போட்டி

கோவையில் மாநில அளவிலான கராத்தே, சிலம்பம், யோகா போட்டி

12வது ஹயாஷிகா ஹா மற்றும் தி பைட் டர்ஸ் அகாடெமி இணைந்து கோவை கவுண்டம்பாளையம் அடுத்த டி.வி.எஸ் நகரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிக் பள்ளியில் மாநில அளவிலான கராத்தே, சிலம்பம் மற்றும் யோகா போட்டியை நடத்தினர்.

இந்த நிகழ்ச்சியை தி பைட்டர்ஸ் அகாடெமி தலைவர் ரமேஷ் குமார் சிவராஜ் ஏற்பாடு செய்திருந்தார். இந்தப் போட்டியை பள்ளியின் தாளாளர் பானுமதி தொடங்கி வைத்தார். கோவை மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

பல்வேறு பிரிவுகளின் கீழ் நடைபெற்ற இந்த போட்டியில் வீரர் வீராங்கணைகள் அவர்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

கரத்தேவில் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப்பில் முதல் இடத்தை கார்த்திக் அகாடமி ஆஃப் மார்ஷி யல் ஆர்ட்ஸ் பெற்றது. இரண்டாம் இடத்தை ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிக் பள்ளியும் முன்றாம் இடத்தை ஈக்விடஸ் பள் ளியும் நான்காம் இடத்தை சிஎம்சி பள்ளியும் பெற்றன.

சிலம்பத்தில் முதல் இடத்தை ருத்ரன் சிலம்பம் பள்ளியும், இரண்டாம் இடத்தை பாரதியார் சிலம்பம் பள்ளியும், மூன்றாம் இடத்தை குனியமுத்தூர் எஸ் ஆர் வீ பள்ளியும், நான்காம் இடத்தை டி.எம் ஸ்போர்ட்ஸ் அகாடெமியும் பெற்றது.

படிக்க வேண்டும்

spot_img