கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் மாச்சம்பாளையம், ஜி.கே.ஸ்கொயர் பகுதியில் நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் 1.60 கிலோ மீட்டர் தொலைவிற்கு ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் மொத்தம் 45 தார் சாலை பணிகள் நடைபெற்றுவருவதை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உடன் துணை மேயர் வெற்றிசெல்வன், தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி, உதவி ஆணையர் பிரேம் ஆனந்த், செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் கனகராஜ், உதவி பொறியாளர் சதிஷ்குமார் ஆகியோர் உள்ளனர்.