fbpx
Homeபிற செய்திகள்கோவையில் 500 கல்லூரி மாணவ, மாணவிகள் பேரணி நடத்தி சாலை விழிப்புணர்வு

கோவையில் 500 கல்லூரி மாணவ, மாணவிகள் பேரணி நடத்தி சாலை விழிப்புணர்வு

சாலை பாதுகாப்பு குறித்து கோவையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் 500 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவிகள் கைகளில் பதாகைகள் ஏந்தி சென்றனர்.

கோவை மாவட்டத்தில் தினந்தோறும் வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கோவை மாநகர காவல் துறை மற்றும் மாவட்ட காவல்துறை சார்பில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கோவை மத்திய வட்டாரப் போக்குவரத்து சாலையில் மாநகர காவல் துறையினருடன் இணைந்து கோவை ராமகிருஷ்ணா கல்லூரி மாணவ மாணவிகள் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதனை கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் சிற்றரசு கொடி அசைத்து துவக்கி வைத்தார். தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் ஹெல்மெட்,சீட் பெல்ட் அவசியம், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டாதீர்கள் உள்ளிட்ட பதாகைகள் ஏந்தியபடி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

படிக்க வேண்டும்

spot_img