ராமநாதபுரம் மறை மாவட்டத்தின் மூன்று நாள் நடைபெறும் 7வது விவிலிய நற்செய்தி பெருவிழா ராமநாதபுரத்தில் உள்ள அல்வேர்னியா பள்ளி திறந்தவெளி அரங்கில் நிறைவு பெற்றது. நேற்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு ஜெபமாலை மற்றும் துதி ஆராதனை நடைபெற்றது.
10 மணிக்கு மானந்தவாடி அனுகிரஹா தியான இல்லத்தின் இயக்குனர் அருட்தந்தை மேத்யூ வயலாமன்னில் தலைமையில் வேதாகம சொற்பொழிவு நடந்தது. ஒரு மணிக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
தொடர்ந்து பாடல் ஆராதனை, திவ்விய நற்கருணையும் மறைமாவட்ட பிஷப் டாக்டர் பால் ஆலப்பாட் தலைமையில் சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது. திருப்பலியில் அருட்தந்தை ஜோன்சன் கெட்டிக்காரன், அருட்தந்தை மேத்யூ வய லாமன்னில் துணை தலைமை வகித்தனர். பின்னர் பரிசுகள் வழங்கப்பட்டது.
ஹோலி டிரினிட்டி பேராலயம்
ஹோலி டிரினிட்டி பேராலயத்தின் பங்கு தந்தையும் விவிலிய நற்செய்தி பெருவிழாவின் ஒருங்கிணைப்பாளருமான அருட்தந்தை ஜோசப் புத்தூர் நன்றியுரை ஆற்றினார். மறைமாவட்ட பிஷப் டாக்டர் பால் ஆலப்பாட் டின் இறுதி ஆசீர்வாத பிரார்த்தனையுடன் விவிலிய பெருவிழா நிறைவுபெற்றது.
மறைமாவட்டத்தின் அனைத்து பங்குகளில் இருந்தும், ஆசிரமங்கள், குருமடங்கள், கன்னியாஸ் திரிமடங்களில் இருந்தும் ஏராளமானோர் பங்கு பெற்றனர்.
விவிலிய நற்செய்தி பெருவிழாவின் தலைவர் அருட்திரு ஜார்ஜ் நரிக்குழி, ஒருங்கிணைப்பாளர்கள் அருட்தந்தை ஜோசப் புத்தூர், அருட்தந்தை ஆண்டனி மேச்சேரிப்படி, இணை ஒருங்கிணைப்பாளர்கள் அருட்தந்தை சார்லஸ் சிரமல், அருட்தந்தை ஆல்பின் சிராம்பிக்கல் ஆகியோர் இந்த மூன்று நாட்கள் நடைபெற்ற விவிலிய நற்செய்தி பெருவிழாவின் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.