fbpx
Homeபிற செய்திகள்கோவை பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் சார்பில் விடுதி வார்டன்களுக்காக சிறப்பு பயிற்சி

கோவை பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் சார்பில் விடுதி வார்டன்களுக்காக சிறப்பு பயிற்சி

கோவை பி.எஸ்.ஜி.ஆர்.கிருஷ்ணம்மாள் மகளிர் சார்பில் கல்லூரி விடுதி வார்டன்களுக்காக சிறப்பு பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இப்பயிற்சியில் மரியாதையான எல்லைகளை வகுத்தல், பெற்றோர், வருகையாளர்கள் மற்றும் புறத்துறை தொடர்புகளை திறம்பட கையாளுதல், விருந்தோம்பலையும் மாணவர் ஒழுக்கத்தையும் சமநிலைப்படுத்துதல், மனநலம் விழிப்புணர்வு, மாணவிகள் நலன்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டது.

இந்த அமர்வுகளை தொழில்முறை பயிற்சியாளர்கள் சரவணபெருமாள் மற்றும் மதுமிதா ஆகியோர் வழி நடத்தினர்.

இதில் கல்லூரி முதல்வர் டாக்டர் ஹாரதி மற்றும் லதா ஆகியோர் உரையாற்றினர்.

இப்பயிற்சி பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி மனிதவளத்துறை ஏற்பாட்டில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி, தொழில்முறை முன்னேற்றத்திற்கும் மாணவிகளுக்கான பாதுகாப்பான, ஒருங்கிணைந்த, நட்புசூழலை உருவாக்குவதற்கும் கல்லூரியின் தொடர்ந்து எடுத்து வரும் முயற்சிகளை வலியுறுத்தியது.

படிக்க வேண்டும்

spot_img