தேசிய அளவிலான விமானப்படை என்.சி.சி.முகாமில் கோவை பி.எஸ்.ஜி கலை, அறிவியல் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.
கோவை – அவினாசி சாலையில் உள்ள பி.எஸ்.ஜி கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள் 5 பேர், இந்த ஆண்டுக்கான தேசிய அளவிலான அகில இந்திய வாயு சைனிக் முகாமில் கலந்து கொண்டனர்.
இந்த முகமானது ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் நடத்தப்படுகிறது. இதில் நாடு முழுவதுமிருந்து 17 என்.சி.சி. இயக்குநரக மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
இவர்கள் சுமார் மூன்று மாதம் 7க்கும் மேற்பட்ட தேர்வு முகாம்களில் பங்கெடுத்து கோவை, சென்னையில் நடைபெற்ற முகாமில் பயிற்சி பெற்று, துப்பாக்கி சுடுதல், விமானப்பாட எழுத்துத்தேர்வு, டென்ட் அமைத்தல், விமான மாதிரி வடிவமைத்தல், செயல்முறை ஆகிய போட்டிகளில் சிறப்பாக பங்கேற்றுத் திரும்பினர்.
முகாமுக்கு சென்று திரும்பிய பி.எஸ்.ஜி கலை, அறிவியல் கல்லூரி மாணவர்களை கல்லூரி நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன், செயலர் கண்ணையன், முதல்வர் பிருந்தா, விமானப்படை என்.சி.சியின் கமாண்டர் பர்குணன் ஆகியோர் வாழ்த்தினர்.