fbpx
Homeபிற செய்திகள்கோவை போலீசாருக்கு கவாத்து பயிற்சி

கோவை போலீசாருக்கு கவாத்து பயிற்சி

கோவை மாநகர காவல் துறையின் ஆயுதப்படை காவலர் களுக்கான வருடாந்திர படை திரட்டும் கவாத்து நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

ஆயுதப்படை போலீசாருக்கு ஆண்டுதோறும் வருடாந்திர படை திரட்டு கவாத்து என்ற பயிற்சி அளிப்பது வழக்கம்.

அந்த வகையில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், உதவி ஆணையர் சேகர் மேற்பார்வையில் நேற்று கவாத்து பயிற்சி நடைபெற்றது.

மாநகர போலீசில் ஆயுதப் படை தலைமைக் காவலர்களாக பணி புரியும் ஆண், பெண் போலீசாருக்கு இந்த கவாத்து பயிற்சி நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img