கோவையில் தந்தை பெரியாரின் 49 வது நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு தூய்மை பணியாளர் நலவாரிய உறுப்பினர் செல்வகுமார், ஜெய் பீம் லேபர் யூனியன் தலைவர் ரோஷன், திமுக தொழிற்சங்க பிரதிநிதி உக்கடம் சரவணன், வி.ஹெச் ரோடு திமுக பிரமுகர் சிவக்குமார், ராமலிங்கம் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.