கோவை மாநகர ஆயுதப்படையில் பணியாற்றி வரும் காவலர்களின் குடும்பத்தாரின் நலன் கருதி அவர்களது குழந்தைகள் விளையாடு வதற்காக ஆயுதப்படை குடியிருப்பு வளாகத்தில் புதுப்பிக்கப்பட்ட சிறுவர் பூங்காவை கோவை மாநகர காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு திறந்து வைத்தார்.
இப்பூங்காவில் குழந்தைகளுக்கான சறுக்கு, அலை சறுக்கு, இரட்டை ஊஞ்சல், ராட்டின‹ போன்ற விளையாட்டு உபகரணங்கள் புதிதாக பொருத்தப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, கடந்த 26.5.2023ம் தேதியன்று கோவை மாநகர ஆயுதப்படை வளாகத்தில் சிறுவர் பூங்கா திறக்கப்பட்ட நிலையில், இரண்டாவதாக இன்று புதிய சிறுவர் பூங்காவும் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
திறப்பு விழாவில் கோவை மாநகர ஆயுதப்படை காவல் உதவி ஆணையர் கி.சேகர், மோட்டார் வாகனப்பி£வு காவல் ஆய்வாளர் கே.கோவிந்தராஜூ மற்றும் இருபால் காவலர்களும் அவர்களின் குடும்பத்தினர் பலரும் கலந்து கொண்டார்கள்.