Homeபிற செய்திகள்பள்ளி டவுசர்..மஞ்சப்பையுடன் வந்து அசத்திய 50 வயது கோவை முன்னாள் மாணவர்

பள்ளி டவுசர்..மஞ்சப்பையுடன் வந்து அசத்திய 50 வயது கோவை முன்னாள் மாணவர்

கோவை வின்சென்ட் ரோடு கோட்டைமேடு பகுதியில் அமைந் துள்ள நல்ல ஆயன் உயர்நி லைப் பள்ளியில் 1980 ஆம் ஆண்டு முதல் 1990 – 1991 ஆம் ஆண்டு வரை ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கோவை போத்தனூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாம் வகுப்பில் ஒன்றாக இருந்து படித்த மாணவர்கள் ஒன்று சேர்ந்ததும் பலரது முகத்திலும் நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும், பூரிப்பும் காணப்பட்டது.

ஒருவருக்கொருவர் அடையாளம் காண முடியாமல் பள்ளி காலத்தில் நடைபெற்ற நினைவுகளை பகிர்ந்து கொண்டு அடையாளத்தை, நட்புகளை பாசத்தோடு புதுப்பித்துக் கொண்டனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் 1990 ஆம் ஆண்டு படித்த கார்த்தி என்ற கூடலூரை சேர்ந்த மாணவன், கடந்த கால நினைவுகளை நினைவு கூறும் விதமாக அன்றைய காலகட்ட பள்ளி சீருடையான காக்கி அரைக்கால் டவுசர் வெள்ளைநிற சட்டை அணிந்து பள்ளிக்கு வருவது போல் நிகழ்ச்சி நடந்த அரங்கிற்குள் வந்து மேடையில் அமர்ந்தது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

மேலும் கோவை மாநகர துணை காவல் ஆணையாளர் சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களை வெகுவாக பாராட்டி தற்பொழுது இருக்கக்கூடிய காலச் சூழ்நிலைக்கேற்ப விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் விதமாகவும், மேலும் இது போன்ற மாணவர்கள் அரசு நிர்வாகத்தோடு இணைந்து பல்வேறு மக்கள் நல பணிகளிலும் ஈடுபட வேண்டும் என்று மாணவர்களை கேட்டுக் கொண்டதுடன் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய பள்ளி ஆசிரியர்கள் மிகவும் நெகிழ்ச்சியோடு நினைவில் நின்ற நினைவுகளை மேடையில் பகிர்ந்து கொண்டும் மேலும் பல்வேறு நற்செயல்களையும் பாராட்டி பேசினார்கள்.

மேலும் மாணவர்கள் இந்த நாட்டிற்காக தான் கற்ற கல்வியை பிறர் பயன்பட நடந்துகொள்ள வேண்டும் என்று உணர்வு பூர்வமாகவும் பேசி முன்னாள் மாணவர்களை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

மேலும் இந்த விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் பிளமின் மரிய ஜோசப் உட்பட ஆசிரியப் பெருமக்கள் கலந்துகொண்டு மாணவர்களை வாழ்த்தினார்கள்.

படிக்க வேண்டும்

spot_img