கோவை திருமலையம் பாளையம் நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் பெண்கள் மகளிர் பாதுகாப்பு அமைப்பு சார்பாக பல்வேறு துறைகளில் சாதனைப் படைத்த பெண்மணிகளைப் போற்றும் விதமாக பதிமூன்று பெண்மணிகளுக்கு விருது வழங்கும் விழா கல்லூரிக் கருத்தரங்க அறையில் நடைபெற்றது.
நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் அனிருதன் வரவேற்புரை வழங்கினார். நேரு கல்வி குழுமங்களின் தலைவர் மற்றும் வழக்கறிஞர் முனைவர் கிருஷ்ணதாஸ் தலைமை தாங்கி பேசுகையில், பெண்மை என்னும் பேராற்றல் மதிக்கப்பட வேண்டிய ஒன்று.
கடவுளையும் கருவறையில் தாங்கும் சக்தி படைத்தவர் பெண்கள். கடவுள் தந்த வரம் அல்ல பெண்கள் கடவுளாக வந்த வரம் பெண்கள்
என்றார்.
விழாவில் ஐக்கிய தேசிய தூதர் ரித்திஸ் நிவேதா தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.
மேலும் சிறப்பு விருந்தினராக பெரியோ தளவாடங்கள் நிறுவனத்தின் வட்டார மேலாளர் அம்புலி மோகனன் கலந்து கொண்டு சாதனை படைத்த பெண்மணிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இறுதியாக நேரு பெண்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் எம்.சந்தான லட்சுமி நன்றியுரை கூறினார்.