கோயம்புத்தூர் குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு மற் றும் ராயல் கேர் மல்ட்டி ஸ்பெசாலிடி மருத்துவமனை இணைந்து வழக்கறிஞர்கள், வழக்கறிஞர் குமாஸ்தாக்கள், நீதிமன்ற ஊழியர்களுக்கான மாபெரும் இலவச முழுஉடல் பரிசோதனை முகாம் இன்று கோயமுத்தூர் குற்றவியல் நீதிமன்ற வழக் கறிஞர்கள் சங்க நூலக அறை மற்றும் உணவு அறைகளில் நடைபெற்றது.
இந்த முகாமை முதன்மை மாவட்ட நீதிபதி ஜி.விஜயா, முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் ராஜலிங்கம் மற்றும் கோயம்புத்தூர் குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் மூ.மருது பாண்டியன், செயலாளர் க.ஹரிகிருஷ்ணன், துணைத்தலைவர் பி.கிருஷ்ணராஜ் இணைச்செயலாளர் பி.பரிமளா, செயற்குழு உறுப்பினர்கள் பொன்குப்ராஜ், சூரியபிரியா, கார்த்திகா, பார்கவுன்சில் துணைத்தலைவர் ஆர்.அருணாச்சலம், கோயமுத்தூர் வழக்கறிஞர் சங்க தலைவர் ஆர்.பாலகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் எம்.கே.சதிஷ், அரசு வழக்கறிஞர் பி.கிருஷ்ணமூர்த்தி, சிபிஏ முன்னாள் செயலாளர் க.கலையரன் ஆகியோர் துவங்கி வைத்தனர்.
மருத்துவ முகாமில் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், குமாஸ்தாக்கள் என சுமார் 864 பேர் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர். மருத்துவ முகாமில் பங்கேற்ற மற்றும் நீதிமன்ற வளாகத்திற்கு வருகை தந்த பொதுமக்கள் அனைவருக்கும் 4,000 நாட்டு மரக்கன்றுகள் இலவசமாக குற்றவியல் சங்கத்தின் சார்பில் வழங்கப்பட்டது.