கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம் சௌரிபாளையம், உடையாம்பாளையம் பகுதியில் எஸ்பிஎம் திட்டத்தின்கீழ் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் மாநகராட்சி பொது கழிப்பிடம் கட்டப்படவுள்ள இடத்தை மேயர் கல்பனா ஆனந்தகுமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உடன் துணை மேயர் வெற்றிசெல்வன், மாமன்ற உறுப்பினர்கள் கீதா, அம்சவேணி, உதவி ஆணையர் கவிதா, மண்டல சுகாதார அலுவலர் பரமசிவம், உதவி பொறியாளர் கணேசன், சுகாதார ஆய்வாளர் ஜீவமுருகராஜ் ஆகியோர் உள்ளனர்.