fbpx
Homeபிற செய்திகள்இந்தியா இன்னும் 10 ஆண்டுகளில் நிலவுக்கு மனிதனை அனுப்பும் மயில்சாமி அண்ணாதுரை பேட்டி

இந்தியா இன்னும் 10 ஆண்டுகளில் நிலவுக்கு மனிதனை அனுப்பும் மயில்சாமி அண்ணாதுரை பேட்டி

கோவை ராமநாதபுரத் தில் ராஜ்குமார் பல் மருத்துவமனை புதிதாக நவீன வசதிகளுடன் தொடங்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

விழாவில் சிறப்பு அழைப்பாளராக சந்திராயன் முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டுபல் மருத்துவமனையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் .விழாவுக்கு வந்த அனைவரையும் டாக்டர் ராஜ் குமார் வரவேற்றார்.
அதை தொடர்ந்து மயில்சாமி அண்ணாதுரை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-
புதிதாக தொடங்கப் பட்டு உள்ள ராஜ்குமார் பல்மருத்துவமனையில் வெளிநாடுகளில் இந்து வரவழைக்கப்பட்ட நவீன தொழில்நுட்ப கருவிகளை கொண்டு பல்சிகிச்சை அளிக்கும் வசதி வரவேற்கதக்கது. ஒரே நேரத்தில் பலருக்கு சிகிச்சை அளிக்கும் வச தியும் உள்ளது.

மனித னுக்கு பல் சீரமைப்பு பராமரிப்பு, மிக முக்கியம். இந்த மருத்துவமனை கோவை மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம். இந்தியா இன்னும் பத்து ஆண்டுகளில் நிலவுக்கு மனிதனை அனுப்பும் சாத்தியகூறு உள்ளது.

அமெரிக்கா வரும் 3 மாதத்தில் மனிதனை நிலவுக்கு அனுப்ப உள்ளது. நிலாக்கு நாம் அனுப்பிய விக்ரம் லேண்டர் பிரகயான் ரோவர் பணிக்காலம் 14 நாட்கள்தான். அது தன் பணியை முடித்துவிட்டது.

மீண்டும் உயிர்ப்பித்தல் என்பது சாத்திய குறைவு. தனியார் செயற்கைகோள் விடும் திட்டம் நல்லது தான். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது டாக்டர் ராஜ்குமார் உடன் இருந்தார்.

படிக்க வேண்டும்

spot_img