கோவை கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் நிபுணத்துவப் பயிற்சிப் பிரிவும் வணிகவியல் துறையின் தொழில்முறைக் கணக்கியல் பிரிவும், இந்தியப் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தினுடைய (ICAI) தென்னிந்திய பிராந்திய கவுன்சிலின் (SIRC) கோவை கிளையுடன் இணைந்து தணிக்கையாளர் மாநாட்டினை நடத்தியது.
இந்நிகழ்வில், கல்லூரியின் நிர்வாக இயக்குநர் காயத்ரி ஆனந்த் சிறப்பு அழைப்பாளர்களை கௌரவித்தார். இம்மாநாட்டிற்குக் கல்லூரி முதல்வர் முனைவர் பி.கீதா தலைமையேற்று, தணிக்கையாளர் துறையின் சிறப் பியல்புகளை விளக்கினார்.
வணிகவியல் துறையின் புலமுதன்மையர் கே.குமுதா தேவி, தொழில்முறைக் கணக்கியல் பிரிவுத்தலைவர் டி.கார்த்திகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த மாநாட்டின் சிறப்பு விருந்தினராகக் தென்னிந்திய பிராந்திய கவுன்சிலின் உறுப்பினர் சி.ஏ.எஸ்.ராஜேஷ், ரஜனி கோபாலகிருஷ்ணா ஆகியோர் நிதி வளர்ச்சியில் நிபுணர்களின் பங்க ளிப்பினை எடுத்துரைத்து, முக்கியவத்தை வலியுறுத்தினார்.
இந்த மாநாட்டில் தொழிற்முறைப் பயிற்சிப் பிரிவில் பயிற்சியினைப் பெற்று சாதனை படைத்தவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இம்மாநாட்டில் 25 பேராசிரியர்களும், 900 மாணவர்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்.