fbpx
Homeபிற செய்திகள்கோவை கேபிஆர் கல்லூரியில் தொழில்நுட்ப புதுமைகளின் தேசிய கருத்தரங்கம்

கோவை கேபிஆர் கல்லூரியில் தொழில்நுட்ப புதுமைகளின் தேசிய கருத்தரங்கம்

கோவை கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியினுடைய வணிகவியல் துறையின் கணினிப் பயன்பாட்டுப் பிரிவும், வணிகவியல் வர்த்தகப்பிரிவும், மிராண்டா ஹவுஸ் டெல்லி பல்கலைக்கழகத்துடன் இணைந்து, “தொழில்நுட்பப் புதுமைகள் மற்றும் நிலையான வளர்ச்சிக்குரிய மாற்றங்கள்” எனும் தலைப்பில் தேசியக் கருத்தரங்கினை இரு நாட்கள் நடத்தினர்.

இக்கருத்திற்குக் கல்லூரி முதல்வர் முனைவர். பி.கீதா தலைமையேற்று தொழில்நுட்பத்தில் புதுமைகளைப் புகுத்துவதன் மூலம் கிடைக்கப்பெறும் சமூகப் பயன்பாடுகள் குறித்து எடுத்து ரைத்தார்.

வரவேற்புரையை வணிகவியல் பள்ளியின் புல முதன்மையர் குமுதாதேவி வழங்கினார். இக்கருத்திரங்கின் நோக்கவுரையை வணிகவியல் துறையின் கணினிப் பயன்பாட்டுப் பிரிவுத் துறைத்தலைவர் சேகர் வழங்கினார்.

தேசிய அளவில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் ரஷ்யா, குவைத், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை போன்ற பல்வேறு நாடுகளிலிருந்தும், இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் ஆய்வுக்கட்டுரைகள் பெறப் பட்டு, சிறப்பு விருந்தினர் களால் கருத்தரங்க ஆய்வு வெளியிடப்பட்டதோடு, ஆய்வறிஞர்களால் ஆய்வுரை விளக்கங்கள் வழங்கப்பட்டன.

இக்கருத்தரங்கிற்குச் சிறப்பு விருந்தினராக ரஷ்யாவின் மாஸ்கோ பினான்சியல் பல் கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் தினரா ஆர்.ஓர் லோவா கலந்து கொண்டு, தொழில்நுட்ப புதுமைகளின் நுண்ணறிவு நுட்பங்கள் குறித்து சிறப்புரை வழங்கினார்.

மும்பையில் உள்ள இந்தியக் காப்பீட்டு நிறுவனத்தின் தலைவர் வி.ஜெயந்த்குமார், காக்னிசன்ட் அமைப்பின் இணை இயக்குநர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர்.

படிக்க வேண்டும்

spot_img