fbpx
Homeபிற செய்திகள்கேபிஆர் கலை அறிவியல் கல்லூரியில் குடியரசு தின விழா

கேபிஆர் கலை அறிவியல் கல்லூரியில் குடியரசு தின விழா

கோவை கேபிஆர் கலை அறிவியல் கல்லூரியில் குடியரசு தின விழா, துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி மைய துவக்க விழா நடைபெற்றது.
விழாவுக்கு கல்லூரி முதல்வர் ப.கீதா வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக அர்ஜூனா விருது பெற்ற வரும், டோக்கியோ -2020 ஒலிம்பிக் போட்டியாளருமான இளவேனில் வாலறிவன் பங்கேற்று தேசிய கொடியை ஏற்றி வைத்தார். அதைத் தொடர்ந்து துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி மையத்தை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், “மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்துவதோடு விளையாட்டுப் போட்டிகளிலும் பங்கேற்று தங்களது தனித்திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

இந்நிகழ்ச்சியில் கேபிஆர் கல்விக் குழுமங்களின் தலைவர் கே.பி.ராமசாமி தலைமை உரை யாற்றினார். ரஷ்ய பல்கலைக் கழக பொருளாதாரத் துறை பேராசிரியர் தினரா ஆர்.ஒர்லோவா சிறப்புரையாற்றினார்.

அதைத் தொடர்ந்து நடனம், யோகா, சிலம்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முடிவில் ஆங்கிலத் துறை பேராசிரியர் கு.விஜயகுமார் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img