fbpx
Homeபிற செய்திகள்கேபிஆர் கலை அறிவியல் கல்லூரி சார்பில் ரேக்ளா பந்தயம்

கேபிஆர் கலை அறிவியல் கல்லூரி சார்பில் ரேக்ளா பந்தயம்

கோவை, அரசூர் கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரி சார்பில் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. கோவை ரேக்ளா அமைப்புடன் இணைந்து 4ம் ஆண்டாக நடைபெற்ற இந்த பந்தயத்தை கேபிஆர் குழுமத் தலைவர் டாக்டர் கே.பி.ராமசாமி, அவரது துணைவியார் தலைமை வகித்து துவக்கி வைத்தனர்.

200 மீ., 300 மீ., என இரு பிரிவுகளில் இப்போட்டி நடத்தப்பட்டது. இதில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து 400க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ஹோண்டா ஆக்டிவா, 2ம் பரிசாக ஒரு பவுன் தங்க நாணயம், 3ம் பரிசாக முக்கால் பவுன் தங்க நாணயம், 4ம் பரிசாக அரை பவுன் தங்க நாணயம், 5ம் பரிசாக கால் பவுன் தங்க நாணயம், 6 முதல் 10 வரையிலான பரிசாக 1 கிராம் தங்க நாணயங்கள் வழங்கப்பட்டன.

முதல் 30 இடங்களைப் பிடித்தப் போட்டியாளர்களுக்கு வெள்ளி நாணயங்கள் பரிசாக வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கேபிஆர் குழும நிர்வாக இயக்குநர் அனந்தகிருஷ்ணன், அவரது துணைவியார் காயத்ரி, கேபிஆர் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் பி.கீதா, கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் எம்.ராமசாமி, மாணவர்கள் உள்பட கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img