fbpx
Homeபிற செய்திகள்கோவை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் விபத்து சிகிச்சைகள் குறித்த கருத்தரங்கம்

கோவை கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் விபத்து சிகிச்சைகள் குறித்த கருத்தரங்கம்

உலகம் முழுவதும் வருடா வருடம் 1.35 மில்லியன் மக்கள் சாலை விபத்துக்களால் மடிகின்றனர் என்றும் பல லட்சக்கணக்கானோர் கடுமையாக காயமடைகின்றனர் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.


சாலை விபத்துக்குள்ளாபவர்க ளுக்கு குறித்த காலத்தில் முதலு தவியும் மருத்துவமனைகளில் சிகிச்சையும் தேவைப்படுகிறது. அட்வான்ஸ்டு ட்ராமா லைஃப் சப்போர்ட் (ATLS) என்ற திட்டம் மூலம் விபத்துக்களால் ஏற்படும் பல்வேறு வகையான காயங்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை முறைகளை மேற்கொள்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஏடி எல்எஸ் உருவாக்கியுள்ளது.


உலகத் தரமான மருத்துவ சேவைகள் அளிப்பதில் தனிப்பட்ட கவனத்துடன் செயல்பட்டுவரும் கேஎம்சிஹெச் மருத்துவமனை தனது அவசர கால மருத்துவத் துறை சார்பாக கருத்தரங்கு மற்றும் பயிற்சி வகுப்பு ஒன்றுக்கு ஏற்பாடுகள் செய்திருந்த்து.

அதன்படி இரண்டாவது விபத்து சிகிச்சை கருத்தரங்கம் மற்றும் பயிற்சி வகுப்பானது AMTEC (Acute Management of Trauma in Emergency Conditions) என்ற பெயரில் இம்மாதம் 10 மற்றும் 11 தேதிகளில் நடைபெற்று வருகிறது.

அது சமயம் விபத்துகால நிர்வாகம் குறித்த விவாதங்கள், கலந்துரையாடல்கள் மற்றும் விபத்துக்கால சிகிச்சைகள் குறித்த நேரடி செயல் விளக்கம் முதலானவை நடைபெற்றன. மேலும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்பட்டது


கேஎம்சிஹெச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிசாமி, மருத்துவ தொடர் கல்வி திட்டங்கள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்கு ஊக்கமளித்து வருகிறார். கருத்த ரங்கைத் துவக்கி வைத்து அவர் உரையாற்றுகையில் தமிழ்நாட்டில் சாலை விபத்துக்களின் தாக்கம் குறித்து எடுத்துரைத்தார்.

சிறந்த வசதிகள் மற்றும் பயிற்சி பெற்ற மருத்துவர்களுடன் கேஎம்சிஹெச் மருத்துவமனை கோவையில் விபத்துக் கால சிகிச்சையில் முதல்நிலை மைய மாகத் திகழ்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.


இக்கருத்தரங்கை வெற்றிகரமாக நடத்துவதற்கு உறுதுணையாக இருந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களையும் மருத்துவ குழுவினர்களையும் கேஎம் சிஹெச் செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி பாராட்டினார்.


இந்த நிகழ்ச்சியில் டாக்டர் டி.வி.ராமகிருஷ்ணன் – (HOD Emergency Medicine, SRMC, Chennai), டாக்டர் டி.எஸ்.ஸ்ரீநாத்குமார் (Sr. Consultant & Group Head, Sparsh Group of Hospitals, Bangalore), டாக்டர் சௌஜன்யா பதிபன்ட்ல (Sr. Consultant & HOD Emergency Medicine, Yashodha Hospitals, Hitech City, Hyderabad) மற்றும் தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் துறை வல்லுனர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

படிக்க வேண்டும்

spot_img