வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. பல்வேறு இடங்களில் வீர பாண்டியன் சிலைக்கும் படத்திற்கும் அரசு அதிகாரிகள், அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் மரியாதை செலுத்தினர்.
அதன் ஒரு பகுதியாக கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள வீரபாண்டிய கட்ட பொம்மன் சிலைக்கு கோவை மாவட்ட மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன் பேரவை அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் அயோத்தி ரவி, சரவணக்குமார், பேரூர் மணி, பேரூர் விக்கி, விஜய் நாயக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கட்டபொம்மன் சிலைக்கு மரியாதை செலுத்திய அவர்கள் கோவை மாநகருக்கு மத்தியில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சிலை நிறுவ வேண்டும் என அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.