fbpx
Homeபிற செய்திகள்கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதியதாக திறந்து வைக்கப்பட்ட கட்டிடத்தை பார்வையிட்ட அமைச்சர்

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதியதாக திறந்து வைக்கப்பட்ட கட்டிடத்தை பார்வையிட்ட அமைச்சர்

தமிழ்நாடு முதலமைச்சர் பொள்ளாச்சி ஆச்சிப்பட்டியில் நடைபெற்ற அரசு விழாவில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஜப்பான் பன்னாட்டு நிதியுதவியுடன் பன்னடுக்கு மருத்துவமனை கட்டிடத்தை திறந்து வைத்ததை தொடர்ந்து, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதியதாக திறந்து வைக்கப்பட்ட கட்டிடத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் பார்வையிட்டார்.

அருகில் தமிழ்நாடு சுகாதார திட்டத்தின் திட்ட இயக்குநர் டாக்டர் கோவிந்த ராவ் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா, மாமன்ற உறுப்பினர் சுமா உட்பட பலர் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img