fbpx
Homeபிற செய்திகள்‘டேஸ்ட் ஆஃப் கோயம்புத்தூர்’ மாபெரும் உணவுத் திருவிழா- ஜனவரி 5 முதல் 3 நாள்கள் நடக்கிறது

‘டேஸ்ட் ஆஃப் கோயம்புத்தூர்’ மாபெரும் உணவுத் திருவிழா- ஜனவரி 5 முதல் 3 நாள்கள் நடக்கிறது

கோயம்புத்தூர் மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் (சிடிஹெச்ஏ) சார்பில் ‘டேஸ்ட் ஆஃப் கோயம் புத்தூர்’ என்ற மாபெரும் உணவு திருவிழாவின் 6வது பதிப்பு வரும் ஜனவரி 5ம் தேதி துவங்கி 3 நாள்கள் நடைபெற உள்ளது.
கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற உள்ள இந்நிகழ்ச்சி குறித்து சங்கத்தின் தலைவர் கே.ஏ.ராமசாமி, செயலாளர் பாலச்சந்தர் ராஜு, பொருளாளர் கோவிந்தராஜ், டேஸ்ட் ஆஃப் கோயம்புத்தூர் -2024 நிகழ்வின் தலைவர் எஸ்.டேவிட் ஆகியோர் கூட்டாக கூறியதாவது:

இந்த உணவுத் திருவிழா மாலை 5 மணிக்கு தொடங்கி இரவு 10.30 மணி வரை நடைபெறும். இதில் கோவையைச் சேர்ந்த 100 உணவு நிறுவனங்கள் பங்கேற்கின்றன. மொத்தம் 160 ஸ்டால்கள் அமைக்கப்பட உள்ளன.

இந்த நிகழ்வில் சைவ மற்றும் அசைவ உணவுகள், இனிப்புகள், கார வகைகள், சாட் எனும் துரித உணவு வகைகள், கேக்குகள் மற்றும் ஐஸ்கிரீம் என அனைத்தும் ஒரே இடத்தில் உண்டு மகிழலாம்.

இந்த உணவு திருவிழாவில் உணவின் அளவு, விலை நியாயமாக இருக்கும். இந்த திருவிழா கோவை மக்களுக்கு நிச்சய மாக புது அனுபவத்தை அளிக்கும். உணவு திரு விழாவின் நுழைவு கட்டணமாக ரூ.249 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நுழைவு கட்டணம் கிடையாது.

கோயம்புத்தூரில் உள்ள அனைத்து முன்னணி உணவகங்களில் நேரடி யாகவும், ‘புக் மை ஷோ’ மற்றும் ‘பே.டிஎம் இன்சைடர்’ ஆகிய செய லிகள் மூலமாகவும் டிக்கெட்டுகளை பெறலாம். இதேபோல், நிகழ்ச்சி நடைபெறும் நாள்களில் தினமும் பிற்பகல் 2 மணி முதல் கொடிசியா மைதானத்தில் டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம்.

கோவை கலெக்டர் கிராந்தி குமார் பாடி, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மில்கி மிஸ்ட் டெய்ரி நிறுவனர் சதீஷ் குமார் ஆகியோர் விழாவை தொடங்கி வைக்க உள்ளனர்.

திருவிழாவை ஒட்டி, பிரபல பின்னணி பாடகர்கள் ஸ்வேதா மோகன், சைந்தவி, சத்ய பிரகாஷ், சூப்பர் சிங்கர் புகழ் ஸ்ரீதர் சேனா, ஆனந்த் அரவிந்தாக்ஷன், நித்யஸ்ரீ ஆகியோர் இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் நமது பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான மயிலாட்டம், சிலம்பாட்டம், பறையாட்டம், பொய்க்கால் குதிரை, கரகாட்டம் போன்ற தமிழ் கலாச்சார கலைகளும் இதில் இடம்பெற உள்ளன.

மேலும் விவரங்களுக்கு 8925474400, 8925674400 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img