கோவையில் தோப்புக்குள் புகுந்த காட்டு யானை கள் அங்கிருந்த தென்னை மரங்களை வேரோடு சாய்த் துவிட்டு சென்றது கிராம மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை, தொண்டாமுத்தூர் அடுத்த கெம்பனூர் பகுதியில் கதிரவன் என்பவருக்கு சொந்தமான தோப்பு உள்ளது. இந்த தோப்பிற்குள் நேற்று இரவு 7 காட்டு யானைகள் புகுந்துள்ளன.
அந்த யானைகள் தோப்பில் இருந்த தென்னை மரங்களை வேரோடு சாய்த்து சேதப்படுத்தியுள்ளன. கடந்த ஒரு வாரமாக 5 யானைகள் மற்றும் 7 யானை கள் என இரு கூட்டங்களாக வரும் காட்டு யானைகள் தென்னை மற்றும் வாழை மரங்களை சேதப்படுத்தி வருகின்றன.
காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் வனத்திற்குள் விரட்ட வேண்டுமென அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
யானைகள் தென்னை மரங்களை வேரோடு பிடுங்கியெறிந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.