கோவை மாவட்டத்தில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு வாகன வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் வருகின்ற 19ம் தேதி நடை பெறும் மக்களவை பொதுத்தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஸ்வர்கா பவுண்டேசன், எம்.கே பவுண்டேசன், கோயம்புத்தூர் ஆகிய தொண்டு நிறுவனங்கள் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் தங்களுக்குரிய வாக்கு சாவடிகளில் வாக்களிக்க ஏதுவாக இலவச வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாகனம் உதவி தேவைப்படுவோர் 7397700482 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பெயரை 17.04.2024 அன்று மாலை 6 மணிக்குள் பதிவு செய்து கொள்ளுமாறும் இந்த வாய்பினை பயன்படுத்தி கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் 70 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் அனைவரும் வாக்களித்து ஜனநாயக உரிமையை நிலைநாட்ட வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான கிராந்திகுமார் பாடி தெரி வித்துள்ளார்.