Homeபிற செய்திகள்கோவை அங்கன்வாடி மைய கட்டுமானப்பணிகளை சிறுபான்மையினர் நல இயக்குநர் ஆய்வு

கோவை அங்கன்வாடி மைய கட்டுமானப்பணிகளை சிறுபான்மையினர் நல இயக்குநர் ஆய்வு

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் ஆண்டாள் தோட்டம் பகுதியில் PMJVK திட்டத்தின் கீழ் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுவரும் அங்கன்வாடி மையம் கட்டுமானப் பணிகள் மற்றும் என்.பி.இட்டேரி ஒன்பதாவது வீதி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.63.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுவரும் நான்கு வகுப்பறைகள் கட்டுமானப்பணிகளை சிறுபான்மையினர் நல இயக்குநர் சுரேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உடன் ஆளுங்கட்சி தலைவர் கார்த்திகேயன், மாமன்ற உறுப்பினர்கள் உதயகுமார், அஸ்லாம் பாஷா, உதவி பொறியாளர் சபரிராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img