கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மருதமலை, சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் தைப்பூச தேர்திருவிழா மற்றும் கோனியம்மன் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்ரின் சரண்யா, மாநகராட்சி துணை ஆணையாளர் செல்வசுரபி, மாநகர காவல் ஆணையர் (தெற்கு) சரவணகுமார், மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயில் துணை ஆணையர் ஹாஷினி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கோகிலா, காவல் கூடுதல் கண்காணிப்பாளர் ஆறுமுகம் ஆகியோர் உள்ளனர்.