fbpx
Homeபிற செய்திகள்கோவையில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர்

கோவையில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர்

கோவை வடக்கு வட்டம் பாலசுந்தரம் சாலையில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில், 250 மாண வர்கள் தங்கும் வகையில் ரூ.14.87 கோடி மதிப்பில் டாக்டர் அம்பேத்கர் ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் விடுதி கட்டடம் மற்றும் 150 மாணவர்கள் தங்கும் வகையில் ரூ.3.51 கோடி மதிப்பில் டாக்டர் அம்பேத்கர் ஆதிதிராவிடர் நல கல்லூரி மாணவர் கூடுதல் விடுதி கட்டப்பட்டு வருவதையும், தெலுங்குபாளையம் கிராமம் வெங்கடாபுரத்தில் ரூ.17.80 இலட்சம் மதிப்பில் அங்கன்வாடி மைய கட்டடம் கட்டுப்பட்டு வருவதையும் மற்றும் சங்கனூர் கிராமம் சிவானந்த காலனியில் ரூ.19.50 இலட்சம் மதிப்பில் அங்கன்வாடி மைய கட்டடம் கட் டுப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் முடிக்க அலுவலர்களுக்கு உத்தர விட்டார்.

மேலும், கோவை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் கட்டுப்பாட்டில் உள்ள அழகேசன் ரோடு, ராஜா அண்ணாமலை வீதி. வெங்கிட் டாபுரம் நியாய விலைக் கடை களை ஆய்வு மேற்கொண்ட அவர், நியாய விலைக் கடைகளில் உள்ள மொத்த குடும்ப அட் டைகளின் எண்ணிக்கை.

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் விநியோகிக்கப்பட்ட விவரம் குறித்த பதிவுகளை விற்பனை முனைய இயந்திரத்தினை இயக்கி ஆய்வு செய்ததுடன், இருப்பு வைக்கப்பட்டு உள்ள அரிசி, பாமாயில், பருப்பு உள்ளிட்ட பொருட்களின் விவரங்களை நியாய விலை கடைகளின் விற் பனையாளர்களிடம் கேட்டறிந்தார்.

வெங்கிட்டாபுரத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் துறையின் கீழ் செயல்படும் அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்படுவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம். உணவருந்தும் குழந்தைகளின் எண்ணிக்கை குறித்து கேட்டறிந்துடன். குழந்தைகளுக்கு சமைக்கப்பட்ட உணவினை உண்டு அதன் சுவையை பரிசோதித்து பார்த்தார்.

மேலும், பாரதி பார்க் சாலையில், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள பிரசவ பின் கவனிப்பு அறை, அவசர கால கூடும் இடம். கர்ப்பிணி பெண்கள் பகுதி, அறுவை சிகிச்சை அர ங்கம், உள்ளிட்டவைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, தாளியூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தையும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், வெள்ளகிணறு பகுதியில் உள்ள பிற்படுத்தப் பட்டோர் நல மாணவ விடுதி மற்றும் அரசினர் மாணவர் விடுதியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அங்கிருந்த மாணவர்களிடம் அவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் நூலகத்திற்கு தேவையான புத்தகங்கள் மற் றும் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்ததுடன், தினந்தோறும் புத்தக வாசிப்பு, மற்றும் செய்திதாள்கள் வாசிப்பு பழக்கத்தை கடைபிடிக்க மாண வர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுரை வழங்கினார்.

பிற்படுத்தப்பட்டோர் நல மாணவ விடுதியில் மாணவர்களுக்காக சமைக்கப்பட்ட மதிய உணவினை உண்டு அதன் சுவையை மாவட்ட ஆட்சித் தலைவர் பரிசோதித்து பார்த்தார்.

படிக்க வேண்டும்

spot_img