கோவை மாவட்டம், கிணத்துக்கடவு பேரூராட்சியில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட மருத்துவ முகாம், வளர்ச்சித்திட்டப் பணிகள் ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி பார்வையிட்டு ஆய்வு செய் தார்.
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கோவை மாவட்ட நிர்வாகம் சார்பில் தொண்டா முத்தூர், கிணத்துக்கடவு, சூலூர், பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய தொகுதிகளுக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம், பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய திட்டம், சுய உதவிக்குழுக்கள் உரு வாக்குதல், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் புதிய தொழில் தொடங்க கடனுதவி ஆகிய திட்டங்களுக்கான சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கிணத்துக் கடவு பேரூராட்சி சமுதாய கூடத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதைத் தொடர்ந்து, செட்டிபாளையம் பேரூராட்சி, தில்லை நகர் மற்றும் சங்கம் நகர் ஆகிய இடங்களில் அம்ருத் திட்டத்தின் கீழ் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி கட்டும் பணி, சமத்துவபுரத்தில் 2.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டும் பணி,
‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’ திட்டத்தின் கீழ் கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வந்த தூய்மைப் பணி ஆகியவற்றை கலெக்டர் கிராந்தி குமார் பாடி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதைத் தொடர்ந்து கோவை மாநகராட்சி தெலுங்குபாளையம் கூட்டுறவு சங்க நியாய விலை கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க, வரப்பெற்றுள்ள பொருட்களை கலெக்டர் பார்வையிட்டார்.