கோவையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வடக்கு பிராந்திய அலுவலகம் சார்பில், சத்தி ரோடு, ஜி.பி.சிக்னல் அருகே ஜி.பி.கிராண்ட் கேலக்ஸி ஹாலில் கார், வீட்டுக் கடன் மேளா நடந்தது.
போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் மேளாவை துவக்கி வைத்து பேசினார்.
மேளாவில் 20-க்கும் மேற்பட்ட முன்னணி கட்டுமானதாரர்களும், 10-க்கும் மேற்பட்ட முன்னணி கார் டீலர்களும் பங்கேற்றன.
குறைந்த வட்டி விகிதம், கடன் டாக்குமென்டேஷன் இலவசம், பரிசீலனை கட்டணம் தள்ளுபடி, பிற வங்கிகள் மற்றும் நிதி நிறுவனக் கடன்கள் டேக்ஓவர், வாங்கிய கடன் மீது கூடுதல் கடன் போன்ற சிறப்பு சலுகைகளை ஸ்டேட் பாங்க் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியது.
தனித் தனி ஸ்டால்கள்
இது குறித்து டெபுடி ஜெனரல் மேனேஜர் திலிப்சிங் யாதவ் கூறியதாவது: கல்விக் கடன், சிறுகுறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான அரசு திட்டம் சார்ந்த கடன் வழங்குவதற்காக தனித் தனி ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தன என்றார்.
மேலும் தகவல்களைப் பெற 88386 24456, 89034 28902 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. கோவை வடக்கு ரீஜனல் மேனேஜர் ஷிபு தாமஸ் உள்பட பலர் பங்கேற் றனர்.