பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக கோவை கனரா வங்கி சார்பில் தமிழ்நாடு வேளாண்துறை மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கிராமப்புற நிர்வாக துறைக்கு சீர்மிகு ஊடகமுறை மற்றும் காணொலிக்காட்சி கருவிகள் வழங்கப்பட்டது.
இதனை வங்கியின் கோவை வட்ட துணை பொது மேலாளர் ஷோபித் அஸ்தானா முன்னிலையில் ஹைதராபாத் வட்ட துணைப் பொது மேலாளர் கனிமொழி, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர்.வி.கீதாலட்சுமியிடம் வழங்கினார்.