இந்தியர்களின் விருப்பத்துக்குரிய ஆண்கள் ஆடை பிராண்டான பிளாக்பெர்ரிஸ், கோவை ஆர்.எஸ்.புரம், டி.வி.சுவாமி சாலை, ஜீ.ஜே. ஆர்கேட்-ல் தனது 2வது விற்பனை மையத்தை துவங்கியுள்ளது. இங்கு கேஷுவல், ஃபார்மல் ஆடை வகைகள் அணி வகுத்து நிற்கின்றன.
திருமணம், பிஸினஸ் சந்திப்புகள், கிளப் பார்ட்டி, நண்பர்களுடனான உல்லாசப் பொழுதுபோக்கு, டேட் நைட் அல்லது பயணம் போன்ற பல்வேறு மகிழ்ச்சிகரமான நிகழ்வுகளுக்கான பிரத்யேகமான, புத்தம் புதிய பல வடிவ ஆடைகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன.
சட்டைகள், கால்சட்டைகள், டெனிம், டி-ஷர்ட்கள், பிளேசர்கள், சூட்ஸ்-ஜாக்கெட்ஸ் மற்றும் சீசனுக்குப் பொருத்தமான புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஆடைகளின் ரகங்கள் இடம்பெற்றுள்ளன.
பிளாக்பெர்ரிஸ் இணை நிறுவனரும் இயக்குனருமான நிதின் மோகன் கூறுகையில், “நுகர்வோருக்கு, கச்சிதமாகப் பொருந்தக் கூடிய ஸ்டைலான புத்தம் புதிய ஆண்கள் ஆடைகளின் விரிவான தயாரிப்பு வரிசையை, வழங்குவதில் இந்த புதிய விற்பனை நிலையம் திகழும்.
அதே வேளையில் ஈடு இணையற்ற இன்-ஸ்டோர் ஷாப்பிங் அனுபவத்தையும் இது வழங்குகிறது.கோவையில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சேவையை வழங்கி வருகிறோம்“ என்றார்.