fbpx
Homeபிற செய்திகள்அவிநாசிலிங்கம் கல்லூரியில் பொறுப்பு ஒப்படைப்பு விழா

அவிநாசிலிங்கம் கல்லூரியில் பொறுப்பு ஒப்படைப்பு விழா

அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறு வனத்தின் திருச்சிற்றம்பலம் கலை யரங்கில் நன்றி நவிலும் விழா மற்றும் பொறுப்பு ஒப்படைப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தின் பதி வாளர் கௌசல்யா வரவேற்புரை ஆற்றினார்.

கல்வி நிறுவனத்தின் வேந்தர் மீனாட்சி சுந்தரம் தலைமையுரையாற் றினார். இதில் துணைவேந்தர் பாரதி ஹரிசங்கர் சாதனைகள் குறித்தும் ஆய்வறிக்கையினை வாசித்தளித்தார்.

நிறுவனத்தில் 4 பன்னாட்டுக் கருத்தரங்கங்களும், 16 தேசியக் கருத்தரங்கங்களும், 7 பயிலரங் கங்களும், 190 சிறப்புச் சொற்பொழிவுகளும் நடைபெற்றது குறித்தும், பல்வேறு தொழில் சார்ந்த முகாம்களில் நேர்முகத் தேர்வில் மாணவியர்கள் பங்கேற்று மாணவிகள் வேலை வாய்ப்பினை பெற்றது குறித்தும், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டங்களிலும் மாணவியர்கள் பங் கேற்று பல சாதனைகள் புரிந்து விருதுகளைப் பெற்றது குறித்தும், 65 விருதுகள் விளையாட்டுத்துறையிலும் 148 விருதுகள் ஆராய்ச்சிகளிலும் மாணவியரும், ஆசிரியரும் பெற்றமை குறித்தும் எடுத்துரைத்தனர்.

நிகழ்ச்சியின் நிறைவாக மாணவியர் நலன் புல முதன்மையர் வாசுகி ராஜா நன்றியுரை வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img