fbpx
Homeபிற செய்திகள்விமான பயிற்சி நிறுவன விருதுகள் வழங்கும் விழா

விமான பயிற்சி நிறுவன விருதுகள் வழங்கும் விழா

கோவை அவிநாசி சாலை விமான நிலையம் அருகே “வியோம்“ பயிற்சி நிலையம் கடந்த ஐந்து வருடங்களாக செயல்பட்டு வருகிறது. விமானத்தில் பணிபுரியும் வகையில் பல் வேறு பயிற்சி வகுப்புகளை நடத்தி வரும் இந்த நிறுவனம் மத்திய அரசின் “பாரத் சேவாக் சமாஜ்’ன் கீழ் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையம் சார்பில் பீளமேடு தனியார் மண்டபத்தில் நேற்று “பிளை அவார்ட்ஸ்” என்ற பெயரில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் சமூக ஆர்வலர்களுக்கு விருது விழா நடைபெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கோவை சர்வதேச விமானநிலைய இயக்குநர் செந்தில் வளவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

பாரத் சேவாக் சமாஜ் விருது

பாரத் சேவாக் சமாஜ் விருதுகளை கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிர்வாக இயக்குனர் டாக்டர் கிருஷ்ணன், பெண்கள் உடற்பயிற்சி மைய நிறுவனர் டாக்டர் ஜெயா மகேஷ், பயர்பேட் இன்ஸ்டியூட் பேராசிரியர் கருப்புசாமி, பாரதியார் யூனிவர்சிட்டி சிண்டிகேட் மெம்பர் டாக்டர் ராஜசேகர், ஜீவ சாந்தி தொண்டு நிறுவனத்தின் சார்பில் சலீம், அரசியல் பிரமுகர் கதிர், ராணுவ அதிகாரி ரீட்டா, ஆசிரியர் லீலா வதி, சமூக ஆர்வலர்கள் கிருஷ்டினா ஜோசப், பிரியங்கா ஜோசப் ஆகியோர் விருதுகளை பெற்றனர்.

இந்த விழாவில் வியோம் பயிற்சி நிலைய இயக்குனர் அஸ்ரிதா ரவீந்திரன் மற்றும் சண்முகப்பிரியா உள்ளிட்ட ஏராளமான பயிற்சி மைய மாணவ, மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img