fbpx
Homeபிற செய்திகள்கொரோனாவுக்கு பிந்தைய கற்றல் நெருக்கடியை திறம்பட சமாளிக்கும் எக்ஸ்ஸீட் மாணவர்கள்

கொரோனாவுக்கு பிந்தைய கற்றல் நெருக்கடியை திறம்பட சமாளிக்கும் எக்ஸ்ஸீட் மாணவர்கள்

பள்ளி செல்லும் குழந்தைகள், பெரும் பரவலாக இருக்கிற தொற்றுநோயால் தூண்டப்பட்ட கல்வி இடைவெளியில் இருந்து இன்னும் தத்தளித்துக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, மாநில வாரியங்கள் மற்றும் சர்வதேச பாடத்திட்டங்கள் உள்ளிட்ட அனைத்து வாரியங்களுக்குமான நிரூபிக்கப்பட்ட கற்பித்தல் முறையான சிங்கப்பூர் அடிப்படையிலான எக்ஸ்ஸீட் (XSEED), இந்த பெருத்த கற்றல் நெருக்கடி யிலிருந்து மாணவர்கள் அதிக தகவலறிந்த , நம்பிக்கை மிகுந்த மற்றும் அனைத்து வகையிலும் முன்னேற்றமடைந்த தனி நபர்களாக வெளிவர உதவுகிறது.

எக்ஸ்ஸீட் (XSEED) Learnometer தேர்வானது 90 நிமிடம் (வகுப்பு 1-3) முதல் 120 நிமிடம் (வகுப்பு 4-8) வரையிலான கணினி அடிப்படையிலான ஆண்டுத் தேர்வாகும். இது பொதுவாக பாரம் பரிய தேர்வை விட கடினமான தேர்வாகக் கருதப்படுகிறது.

ஏனெனில் மாணவர்கள் ஃபாக்ட்ஸ் மற்றும் ஃபார்முலாஸை நினைவுபடுத்துவதை விட தங்கள் அறிவைப் பயன்படுத்த வேண்டும். மூன்று முக்கிய பாடங்களுக்கு கூடு தலாக, தேர்வானது மாணவர்களின் மூன்று முக்கிய சிந்தனை திறன்களை மதிப்பீடு செய்தது – கருத்தியல் புரிதல், சிக்கலைத் தீர்ப்பது மற்றும் தகவல் தொடர்பு – இந்த குழந்தைகளின் தகவல் தொடர்பு திறன்கள் 47% ஆக உயர்ந்ததாகக் கண்ட றியப்பட்டது.

“தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி XSEED கல்வியை சிறப்பித்தது என்று சொல்லும் இந்த முடிவுகளால் ஊக்க மடைந்து மகிழ்ச்சியடைகிறோம். கோவிட் காரணமாக நிகழ்ந்த இந்த கற்றல் இழப்பைப் பற்றி பெற்றோர்கள் கவலைப்படுகிறார்கள்.

ஆனால் இந்த முடிவுகள் குறைந்தபட்சம் XSEED மாணவர்களுக்காவது மீட்பு நடந்து கொண்டிருக்கிறது என்பதை நிரூபிக்கிறது. முக்கியமாக, உயர்வகுப்பில் உள்ள XSEED மாணவர்கள் 20% சிறந்த செயல்திறனைக் காட்டியுள்ளனர்.

இது மற்ற சக மாணவர்களை விட போர்டு தேர்வுகளுக்கான அவர்களின் தயார் நிலையையும், குழந்தையின் கல்வி அடித்தளத்தில் முதலீடு செய்வதில் உள்ள மதிப்பையும் அடிக் கோடிட்டுக் காட்டுகிறது.

21 மாநிலங்களைச் சேர்ந்த 61 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர்” என்று XSEED கல்வி நிறுவனர், ஹார்வர்ட் முன்னாள் மாணவர் மற்றும் உலகப் புகழ்பெற்ற கல்வியாளர் டாக்டர் ஹோவர்ட் கார்ட்னரின் முன்னாள் மாணவர் ஆஷிஷ் ராஜ் பால் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img