மகளிருக்காகச் சேவை நோக்கில் முதன் முதலில் தொடங்கப்பட்ட பாரம்பரியமிக்க நிர்மலா மகளிர் கல்லூரி 75 வயதினைக் கடந்து பவள விழாவினைப் கொண்டாடுகிறது. பிப்ரவரி ஆறாம் தேதி ஓய்வு பெற்ற செயலர், முதல்வர், பேராசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் ஆகிய அனைவரையும் வரவேற்றுக் கவுரவித்தது.
நேற்று (7ம் தேதி) வழிபாட்டுக் கூட்டத்துடன் பவள விழா நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்நி கழ்ச்சிக்குப் பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள், கல்லூரியின் நலம் விரும்பிகள், விளம்பரம் கொடுத்துப் பேராதரவு தந்த அன்பர்கள் முதலிய அனைவரையும் கல்லூரி நிர்வாகம், செயலர், முதல்வர், மற்றும் நிர்மலா கல்விக் குழுமம் இன்முகத்துடன் வரவேற்றது.
காலை 11 மணியளவில் கோவை நிர்மலா மகளிர் கல்லூரியின் 75ஆம் ஆண்டு பவளவிழாவினை ஒட்டித் திறந்தவெளிக் கலையரங்கத் தில் அருட்தந்தை முனைவர் ஆர்.டி. ஜெரோம் தலைமையில் நற்கருணை ஆசிர்வாத கொண்டாட்டத்துடன் விழா தொடங்கியது. மாணவியரின் இறைவணக்கத்துடன் நிகழ்ச்சி இனிதே தொடங்கியது. தொடர்ந்து தேசிய மீள்தர நிர்ணயகுழுவின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் பவுலின் வசந்தி ஜோசப் நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றார்.
அடுத்ததாக நிர்மலா கல்விக்குழு மங்களின் தலைவி மற்றும் காணிக்கை அன்னை சபை தலைவி அன்னை பபி லினெட் வாழ்த்துரை வழங்கினார்.
தொடர்ந்து கல்லூரி முதல்வர் முனைவர் மேரி பபியோலா கல்லூரியின் அறிக்கையை வாசித்தார்கள். ஆண்ட றிக்கை காணொளி மூலம் காட்சிப்படுத்தப்பட்டது.
முதன்மை விருந்தினராகப் டெல்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் சாந்தி ஸ்ரீ துலிபுடி பண்டிட் கலந்து கொண்டார். மகளிர் மேம்பாடு அடைவதற்கான வழிமுறைகள், அவர்தம் சிறப்பு ஆகியவற்றை எடுத்துரைத்தார்.
கோவை கல்லூரி கல்வி இணை இயக்குனர் முனைவர் கலைச்செல்வி கலந்து கொண்டு தம் அனுபவத்தைப் பதிவு செய்தார். கோவை மகளிர் மையம், மருத்துவ இயக்குனர் முனைவர் மிருது பாஷினி கோவிந்த ராஜன் கலந்து கொண்டு மருத்துவத்தின் புனிதத்தை எடுத்துரைத்தார்.
இவ்விழாவிற்குத் தூய காணிக்கை அன்னை பபி லினெட் முன்னிலை வகித்தார், கல்லூரிக்குப் பேராதரவு தந்து உதவிய அன்பர்கள், பேராசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள், பெற்றோர்கள், மாணவியர் கலந்து கொண்டனர்.
கல்லூரி ஆண்டுமலர் முதல் பிரதியை தூய காணிக்கை அன்னை கன்னியர் சபையின் தலைவி அன்னை பபி லீனெட் வெளியிட அதனைச் சிறப்பு விருந்தினர் பெற்றுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் இரவேல் மறை மாநில தலைவி அருட்சகோதரி வலேரியா கலந்து கொண்டார். மாணவியரின் கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
இவ்விழாவில் கல்லூரியின் செயலர் முனைவர் அருட்சகோதரி குழந்தை தெரேஸ், முதல்வர் முனை வர் அருட்சகோதரி மேரி பபியோலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.