சிபிஎஸ்சி பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் கரூர் ஸ்ரீ சைதன்யா டெக்னோ பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று சிறப்பிடத்தை பெற்றதால், அவர்களுக்கு பாராட்டு விழா பள்ளி கூட்டரங்கில் பள்ளியின் ஏஜிஎம் வெங்கடகிருஷ்ணா ரெட்டி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ஜெயராம் பள்ளியின் தாளாளர் பொறியாளர் ராமசாமி பங்கேற்று சிறப்பித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பத்தாம் வகுப்பு தேர்வில் 500க்கு 495 மதிப்பெண் பெற்ற இனியா, தன்விகா, பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில்அதிக மதிப்பெண்கள் பெற்ற ஸ்ரீ நந்தினி ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து கேடயம் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இதேபோல நடந்து முடிந்த தேர்வில் தமிழ், அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற 12 மாணவர்கள், 480 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்ற 17 மாணவ- மாணவிகளுக்கும் சால்வை அறிவித்து கேடயம் வழங்கி பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு தெரிவித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் ஒருங்கி¬ ணப்பாளர் சந்திரமோகன், மேல்நிலைப்பள்ளி முதல்வர் தினேஷ், உய ர்நிலைப்பள்ளி முதல்வர் வடிவுக்கரசி, மற்றும் பள்ளியில் பணியாற்றும் இருபால் ஆசிரியர்கள், மாணவ- மாணவியர் அவரது பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் நிறைவில் பத்தாம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற இனியா, தன்விகா ஆகியோர் செய்தியா ளர்களிடம் கூறுகையில், தேர்வுக்காக நாங்கள் கடுமையாக உழைத்தாலும் பள்ளி நிர்வாகம் எங்களது உழைப்பை அங்கீகரித்து ஒருங்கி ணைத்து தேவையான சந்தேகங்களை தீர்த்து வைத்து அதிகப்படியான மதிப் பெண் பெறுவதற்கு பெரும் அளவில் ஒத்துழைத் தது. எங்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த பெற்றோருக்கும், வழி நடத்திய ஆசிரியர்களுக்கும் நன்றி,
என தெரிவித்தனர்.