கடலூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் கிராமப் புறங்களின் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக ஊரக வளர்ச்சி துறை வாயிலாக மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகள் குறித்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
பின்னர் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது: ஊரக மக்களின் நலன் கருதியும். கிராமப்புறங்களில் உட் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடவும், நகர்ப் புறங்களுக்கு இணையாக அனைத்து வசதிகளையும் கிராமங்களில் ஏற்படுத்திடும் வகையிலும் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
இக்கூட்டத்தில் ஊரக பகுதியில் உள்ள குடிசைகளை மாற்றி, அனைவருக்கும் பாதுகாப் பான நிரந்தர கான்கிரீட் வீடுகளை அமைத்து தரும் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறியப்பட்டது.
மேலும் இத்திட்டத்தில் அரசு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள அளவில் குடியிருப்புகள் கட்டுமான பணிகள் மேற்கொள்வதையும், வெவ்வேறு நிலைகளில் நடைபெற்று வரும் வீடு கட்டுமான பணிகளை துறை சார்ந்த அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து பணிகளை விரைந்து முடித்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், குழந்தை நேய பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம், 15வது நிதி குழு மானியம், தூய்மை பாரத இயக்க திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வாயிலாக கிராம ஊராட்சிகளில் அடிப்படை உட்கட்டமைப்பு தேவைகளான சாலை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு, கிராம ஊராட்சிகளிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் தனிநபர் வீட்டு குடிநீர் குழாய் இணைப்பு கள் வழங்குதல், திட, திரவக் கழிவு மேலாண்மை மற்றும் பொது சுகாதார பணிகள், கிராமப்புற நூலகம் அமைத்தல், பழுதடைந்த அங்கன்வாடி மைய கட்டிடங்களை சீரமைத்தல், விளையாட்டு மைதானம் அமைத்தல், சுடுகாடு வசதிகள் ஏற்படுத்துதல் போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருதல் மற்றும் மேம்படுத்துதல் தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது
கிராமப்புறங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம், சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டப் பணி கள் உள்ளிட்ட அனைத்து திட்ட பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறினார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் பிரியங்கா, செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சித் துறை) வரதராஜ பெருமாள். துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



