fbpx
Homeபிற செய்திகள்உதகை மலர் கண்காட்சியை முன்னிட்டு பூங்காக்களுக்கான போட்டி: தேர்வு குழு ஆய்வு

உதகை மலர் கண்காட்சியை முன்னிட்டு பூங்காக்களுக்கான போட்டி: தேர்வு குழு ஆய்வு

உதகையில் 126வது மலர் கண்காட்சி மே 10ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு சிறந்த பூங்காக்களுக்கு பரிசுகள் வழங்க நீலகிரி மாவட்டம் முழுவதும் சிறந்த பூங்காக்களுக்கான தேர்வு செய்யும் குழு நேரில் சென்று தேர்வு செய்துள் ளது. இதன் ஒரு பகுதியாக பல்வேறு போட்டிகளில் பங்கேற்பதற்காக 188 நபர்கள் விண்ணப்பம் பெற்று போட்டியில் தங்களது காட்சிப் பொருட்களை காட்சிப்படுத்தினர்.

அதில் சிறந்த மலர் அலங்காரம், கொய்மலர் போன்றவையும் வெப்ப மண்டல, மித வெப்ப மண்டல மலைப்பிரதேச மற்றும் பாரம்பரிய காய்கறிகள், பழங்கள், பழப்பொருட்கள், மருத்துவ தாவரங்கள் போன்ற விளைப்பொருட்களை காட்சிப்படுத்தினர்.

இதில் முக்கியமாக நீலகிரி மாவட்டத்திற்கே உரித்தான உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், மேரக்காய் உள்ளிட்ட மலைப்பிரதேச காய்கறிகள் இனத்தில் பாரம்பரிய காய்கறிகள் உட்பட 35 வகை காய்க றிகளை 13 விவசாயிகள் மற்றும் போட்டியாளர்கள் பங்கேற்று விளைப்பொருட்களை காட்சிப்படுத்தினர்.

இதைத் தொடர்ந்து, சிறந்த போட்டியாளர்களை தேர்வு செய்யும் குழு போட்டியாளர்கள் காட்சிப்படுத்திய வகை மற்றும் ரகங்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் தேர்ந்தெடுத்துள்ளது. அதன் படி, சிறந்த போட்டியாளர் களுக்கு போட்டியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் முதல், இரண்டாம், மூன்றாம் பரிசாக ரொக்கப்பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, போட் டியில் பங்கேற்ற விவசாயி சர்ச்ஹில் தரண் மற்றும் சென்னகேசவன் ஆகியோர் கூறும்போது: பரம்பரை பரம்பரையாக நாங்கள் காய்கறி விவசாயம் செய்து மலர்க்காட்சியின் போது காட்சிப் படுத்துகிறோம்.

தோட்டக்கலைத்துறை மற்றும் அரசு தாவரவியல் பூங்கா நிர்வாகம் வருடந்தோறும் எங்களுக்கு காட்சிப்படுத்த தேவையான உரிய வசதிகளை செய்து கொடுப்பதோடு, விளைப்பொருட்களை விற்பதற்கு தேவையான வசதிகளையும் ஏற்படுத்தித்தர நடவடிக்கை எடுக்க முன்வருகிறது. மேலும், நான் மலர்க்காட்சியில் 35 வகை காய்கறிகளில் கேரட், உருளை கிழங்கு, பூண்டு, பீன்ஸ், பட்டாணி போன்ற பாரம்பரிய காய்கறிகள் உட்பட சுமார் 80க்கும் மேற்பட்ட ரகங்களை காட்சிப்படுத்தியுள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img