பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் 225 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கோவை பிரேக்டன் இந்தியா நிறுவனத்தின் மேலாளர் ராஜ்குமார் பாலன் பங்கேற்று உரையாற்றினார்.
கல்லூரி தாளாளர் வெங்கடாச்சலம், அறக்கட்டளை நிர்வாகிகள் குமாரசாமி, கிருஷ்ணன் தேவராஜா, தங்கவேல், கல்லூரி முதல்வர் ஏ.வேதகிரி ஈஸ்வரன், பிரேக்டன் நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டுத் துறை மேலாளர் திரு. ஸ்ரீகாந்த் அவர்கள், கல்லூரி துணை முதல்வர் செந்தில்குமார், வேலைவாய்ப்பு அலுவலர் சு.கோமதிசங்கர் மற்றும் கெமிக்கல் துறை தலைவர் ஆ.நந்தகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.