பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகளுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ், உயர் கல்விக்கு வழிகாட்டும் ‘கல்லூரிக் கனவு நிகழ்ச்சி கடலூர் திருப்பாதிரிப்புலியூ ரில் உள்ள தனியார் பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அ.அருண் தம்புராஜ் தலைமை வகித்து ‘கல்லூரிக் கனவு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.நிகழ்வையொட்டி, பல்வேறு அரசுத் துறைகள், கல்லூரிகள்,தொழில்பயிற்சி நிலையங்கள் மூலம் உயர் கல்விக்கான வழிகாட்டு தல் வழங்கும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டு, மாணவர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 1,920 மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்கள் இணைய வழியில் பார்த்து பயனடையவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
முன்னதாக, ஆட்சியர் அ.அருண் தம்புராஜ் பேசியதாவது:இந்த நிகழ்ச்சியில் உயர் கல்விக்கான வாய்ப்புகள் பற்றியும், பிரிவு வாரியான பட்டப்படிப்புகள், பட்ட யப் படிப்புகள் குறித்தும், கல்லூரி களை எவ்வாறு தேர்ந்தெடுப்பது. மேற்படிப்பை முடித்தவுடன் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் போன்ற வி ரங்கள் குறித்தும் பல்வேறு தொழில் வல்லுநர்கள், கல்வியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்களைக் கொண்டு வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன.
பள்ளிப் படிப்பை கடந்துள்ள மாணவர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி உயர் கல்வியை அடைய வேண்டும். பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களும் உயர் கல்வியை அடைவதே இதன் இலக்கு. வாழ்க்கையில் கல்வி ஒன்றால்தான் மாற்றத்தை பெற முடி யும் என்றார்.
தமிழக அளவில் கடலூர் மாவட்டம் பிளஸ் 2 தேர்வில் 22-ஆவது இடத்துக்கும், பத்தாம் வகுப்பு தேர்வில் 19-ஆவது இடத்துக்கும் முன்னேறி உள்ளது. இந் தத் தேர்ச்சி விகிதத்த அடைய ஒத்து ழைத்த கல்வித் துறை அலுவலர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுக்கு ஆட்சியர் வாழ்த்துக்களைத் தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ம.ராஜசேகரன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ரா.சரண்யா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கா. பழனி மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் தொழில் துறையைச் சார்ந்த வல்லுநர்கள் கலந்துகொண்டனர்.